உலகம்

உக்ரைன் போரில் போர்நிறுத்தக் கோரிக்கையை கைவிட்ட அமெரிக்க ஜனாதிபதி

அண்மையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உக்ரைன் போருக்கான தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

முன்னர் வலியுறுத்திய போர்நிறுத்தக் கோரிக்கையை கைவிட்டு, பரந்த அளவிலான அமைதி ஒப்பந்தத்தை முன்னெடுக்கும் ரஷ்யாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளித்துள்ளார்.

அலாஸ்காவில் நடந்த சந்திப்பை அடுத்து, டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில், “ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பயங்கரமான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சிறந்த வழி, வெறுமனே ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் அல்ல, மாறாக ஒரு முழுமையான அமைதி ஒப்பந்தம் தான் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடன் பேசியதில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது, அவரது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் மாறுபடுகிறது. போர்நிறுத்தத்தை தவிர்ப்பது, பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவிற்கு சாதகமாக அமையும் என சில ஐரோப்பியத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய அணுகுமுறை குறித்து விவாதிக்க, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்க உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *