இந்தியா மீது இரண்டாம் கட்ட வரிவிதிப்பு; அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது 25 சதவிகித வரியை விதித்தார். இருப்பினும், தனது நீண்டகால நட்பு நாடான ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டது.
இதனையடுத்து, இந்தியா மீது மேலும் 25 சதவிகித வரியை ட்ரம்ப் விதித்தது உலக பொருளாதார நாடுகளிடையேயும் பேசுபொருளாகியது.
இதனிடையே, ரஷியா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும் பேச்சுவார்த்தையில் ட்ரம்ப்பும் ரஷிய ஜனாதிபதி விளாதிமீர் புடினும் ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில், அலாஸ்காவில் நடைபெறவுள்ள ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து, அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசண்ட் கூறுகையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லையெனில், வரி அதிகரிக்கப்படலாம். ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்கும் இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
![]()