இந்தியாவிற்கு அகதியாக சென்று யாழ் திரும்பிய தம்பதியர் கைது!; மீண்டும் பாயும் சட்டம்

இந்தியாவிலிருந்து பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக விமானத்தில் யாழ்ப்பாணம் வருகை தந்த தம்பதியர் நேற்று முன்தினம் புதன்கிழமை விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் 1996 ஆம் ஆண்டு தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்குப் படகு மூலம் பயணம் செய்து தமிழ்நாட்டு மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்ததாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையக் குடிவரவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இருவரிடமும் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர் இருவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேவேளை, யுத்த காலத்தில் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக இந்தியாவின் தமிழகத்திற்குத் தப்பிச் சென்ற யாழ்ப்பாணம் ஏழாலையைச் சேர்ந்த 75 வயதான முதியவரொருவர் சுமார் 37 ஆண்டுகள் கடந்து நாடு திரும்பிய போது கடந்த மேமாதம்-29 ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்துப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த முதியவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடும் எதிப்பால் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
![]()