பள்ளிவாசல் படுகொலைகளுக்கும் சர்வதேச விசாரணைகள் வேண்டும்

முழுமை பெறாதுள்ள காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை விசாரணைகளை சர்வதேச மயப்படுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் அனுஷ்டிக்கப்பட்ட 35ஆவது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே
ரவூப்ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.காத்தான்குடி பள்ளிவாசல்களில் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவதப் படுகொலைகளால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இறைவனை சுஜூது செய்து கொண்டிருந்தபோது ஷஹீதாக்கப்பட்டனர்.
இவர்களை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட ஷுஹதாக்கள் தினம் காத்தான்குடியில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது:
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03ஆம் திகதி ஹுஸைனியா பள்ளிவாrலிலும், மீரா ஜும்ஆ பள்ளிவாrலிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில்,103 முஸ்லிம்கள் ஷஹீதாக்கப்பட்ட
னர்.உயிர்நீத்த ஷுஹதாக்கள் நினைவாக துஆப் பிரார்த்தனை
இடம்பெற்றுள்ளது. இதில் பங்கேற்றதில் ஆத்ம திருப்தி.
தொண்ணூறுகளின் துயர நினைவுகளை மீட்டிக்கொள்வதற்கும் ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாக இது வாய்த்திருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்களின் படிப்பினைகளை சரிவர உணர்ந்து, இனங்களுக்கிடையிலான உறவை மீளக் கட்டியெழுப்புவதில் எமது கட்சியும், கட்சித் தொண்டர்களும் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்.
அந்த திடசங்கர்ப்பத்தை நாம் இந்த ஷுஹதாக்கள் நினைவு நாளில் உறுதி பூணுகிறோம். மாத்திரமல்லாமல், இத்துன்பியல் சம்பவங்கள் குறித்த வரலாற்றையும் சரிவர தொடர்ந்தும் மனதிலிருத்தி முறையான பணிகளைச் செய்வதும் அவசியம்.முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டியதும் முக்கியமானதாகும்.
![]()