முச்சந்தி

“அனுர மோடி இந்திய திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறி”; தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் “அனுர மோடி இந்திய திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறி” மற்றும் “ஐ.எம்.எப் மரணப் பொறியை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில்

சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியினர் ஆதரவு வழங்கும் முகமாக கலந்து கொண்டுள்ளதுடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்று தர வேண்டியும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சரியான நீதியான விசாரணை வேண்டும் எனும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மலையக மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் காணி பிரச்சினைகளுக்கான தீர்வு சரியான முறையில் வழங்கப்பட வேண்டும் எனவும் ஆட்சிக்கு வர முன்னர் அரசாங்கம் கூறிய விடயங்களை சரியான முறையில் பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button