முச்சந்தி
நியூயோர்க் மேயர் வேட்பாளராக ஜோஹ்ரான் மம்தானி !…. அமெரிக்க அதிகாரத்திற்கு சிம்ம சொப்பனம்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

இந்திய-அமெரிக்கரான ஜோஹ்ரான் மம்தானி நியூயோர்க் நகர மேயர் பதவியின் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக உறுதி செய்யப்பட்டுள்ளார். ஜோஹ்ரான் மம்தானி, நியூயோர்க் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், ஜனநாயக சோசலிசவாதியாகவும் திகழும் நிலையில், நியூயோர்க் நகர மேயர் பதவிக்கான ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் தனது வெற்றியை அறிவித்துள்ளார்.
நியூயோர்க் மேயர் வேட்பாளர்:
33 வயது இளைஞன் ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) தன்னை ஜனநாயக சோசலிசவாதி என வெளிப்படையாக கூறி வருபவர். இவரிடம் தோல்வியுற்ற முன்னாள் கவனர் கோமோவும் தற்போதைய மேயர் எரிக்கும் சுயேற்சையாக போட்டியிடப் போவதாய் அறிவித்துள்ளார்கள்.
நியூயோர்க் மேயருக்கான தேர்தல் நவம்பர் 4ம் திகதியே இடம்பெற உள்ளது. மம்தானிக்கு எதிராக இதுவரை பெருமளவு பணம் 30 மில்லியன் டொலர்கள் வரை செலவிடப்பட்டுள்ளது.அமெரிக்காவில் அவரை வீழ்த்துவதற்கான எல்லா வியூகங்களுக்கும் பணத்தை வாரி இறைக்க பெரும் தலைவர்கள் தயாராக உள்ளனர்.
ஆனாலும் 50,000இற்கு மேற்பட்ட தொண்டர்கள் இவரின் முதலாவது வெற்றிக்காக பங்காற்றியிருந்தார்கள். 20,000 மேற்பட்ட மக்கள் இவருக்கு நிதியுதவி அளித்துள்ளார்கள். இதன் மூலம் 18மில்லியன் டொலர் சேகரிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தனக்கு பணம் வேண்டாம், தொண்டர்கள் மட்டுமே வேண்டும் என்று அறிவித்தார்.
இவர் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் மீரா நாயரின் மகனாவார். இவரது தற்போதைய வெற்றியே அமெரிக்காவில் பரபரப்பாய் உள்ளது.
முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஜோஹ்ரான் அமெரிக்காவின் நியூயார்க் மாநகர ஜனநாயகக் கட்சியின் மேயர் பதவி வாக்கெடுப்பில் 56% வாக்குகளைப் பெற்று அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார். முதல்முறையாக முஸ்லிம் மேயராக ஜோஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டால், அவர் பல எதிர்ப்புகளை தாண்டிய வரலாற்றுப் வெற்றியை பெறுவார்.
முற்போக்கான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவருக்கு எதிராக பெரும் நிதியுதவியுடன் கூடிய ஜி -இஸ்ட் பிரச்சாரம் இருந்தபோதிலும், ஐந்து பெருநகரங்களிலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் யூத குடியிருப்பாளர்கள் இருந்தபோதிலும், அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.
யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?
உகண்டாவின் கம்பாலாவில் 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜோஹ்ரான் மம்தானி. சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கிய மிரா நாயர் இவரது தாயார் ஆவார். தந்தை கல்வியாளர் மஹ்மூத் மம்தானி. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் குழந்தை பருவத்தை கழித்த ஜோஹ்ரான் ஏழு வயதில் நியூ யார்க் நகரில் பெற்றோர்களுடன் குடிபெயர்ந்தார்.
போடோயின் கல்லூரியின் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும்போதே ஜோஹ்ரானின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாலஸ்தீன நீதிக்கான மாணவர்கள் என்ற அமைப்பை நிறுவினார். அஸ்டோரியா மற்றும் லாங் தீவு உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய 36-வது மாவட்டத்தின் பிரதிநிதியாக நியூ யார்க் மாகாண அவைக்கு 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.சிரியா நாட்டின் கலைஞர் ராமா துவாஜி என்பவரை இந்தாண்டு தொடக்கத்தில் ஜோஹ்ரான் திருமணம் செய்துகொண்டார். மலிவு விலை வீடுகள், பொது போக்குவரத்து மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் ஆகியவற்றை தொடர்பாக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
தனது முற்போக்கு கருத்துகளால் நியூயார்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் ஜோஹ்ரானுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நியூயார்க் மேயராக ஜோஹ்ரான் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நியூயார்க் மேயராக அவர் தேர்வானால், முதல் முஸ்லிம் மற்றும் இந்திய – அமெரிக்க மேயர் என்ற வரலாறு உருவாகும்.
மோடி ஒரு போர்க் குற்றவாளி:
நரேந்திர மோடி முதல் இஸ்ரேல் வரை, ஜோஹ்ரான் மம்தானி பலரை வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த மாதம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேடிசன் சதுக்கத் தோட்டத்தில் ஒரு கூட்டத்தை நடத்தினால், அதன் பிறகு ஒரு கூட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தினால் அதில் நீங்கள் பங்கேற்பீர்களா என்ற கேள்வி மம்தானியிடம் முன்வைக்கப்பட்டது.
என் அப்பாவும் அவரது குடும்பத்தினரும் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். குஜராத்தின் முஸ்லிம்களை கொத்துக் கொத்தாகக் கொல்ல மோடி உதவினார். அங்கே அளவுக்கு அதிகமான வன்முறை நிலவியது. தற்போது குஜராத்தில் இஸ்லாமியர்களே இல்லை என்பது போன்ற ஒரு தோற்றம் நிலவுகிறது.
நாம் பெஞ்சமின் நெதன்யாகுவை பார்ப்பதைப் போன்றே, மோடியையும் பார்க்க வேண்டும். அவர் ஒரு போர்க் குற்றவாளி, என்று மம்தானி பதில் அளித்தார்.
நியூயார்க்கில், அவரது இந்த அறிக்கைக்குப் பிறகு சில இந்திய – அமெரிக்கர்கள், இந்துத்துவா குழுக்கள் அவரது கருத்தை வெறுப்பு கொண்ட, பிரிவினையை ஏற்படுத்தும் கருத்து என்று விமர்சித்தனர். மம்தானி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
நெத்தின்யாகு வந்தால் கைது:
நியூயோர்க்குக்கு இஸ்ரேலிய பிரதமர் நெத்தின்யாகு வந்தால் கைது செய்வேன் எனவும் சூளுரைத்துள்ளார். அது மட்டுமல்ல இந்திய பிரதமர் மோடியை தனது நகரம் வரவேற்காது. குஜாராத்தில் இஸ்லாமியர்கள் படுகொலைக்கு மோடியே காரணம் எனவும் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
ஜோஹ்ரான் சியோனிசவாதிகள் மீது காட்டமான விமர்சனம் கொண்டவர் என்பது
குறிப்பிடத்தக்கது. தற்போது நியாயத்தை கதைத்தால் வாக்கு கிடையாது என்று ஒதுங்கும் அரசியல் தலைமைகள் தங்கள் ஒவ்வாமையை வெளிக்காட்டத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவின் அதிகாரத்துவ கோட்டைக்குள்ளேயே சிறு புரட்சி நடக்கிறது என்றால் மிகையாகாது.
குறிப்பிடத்தக்கது. தற்போது நியாயத்தை கதைத்தால் வாக்கு கிடையாது என்று ஒதுங்கும் அரசியல் தலைமைகள் தங்கள் ஒவ்வாமையை வெளிக்காட்டத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவின் அதிகாரத்துவ கோட்டைக்குள்ளேயே சிறு புரட்சி நடக்கிறது என்றால் மிகையாகாது.அத்துடன் பாலஸ்தீன விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மை தலைவர்களிடம் இருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கிறார் மம்தானி. அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலை தொடர்ந்து எதிர்த்தும்-விமர்சித்தும் வருகிறார்.
அமெரிக்க தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், இஸ்ரேல் ஒரு யூத நாடாக இருப்பதை அவர் எதிர்த்தார். “மதம் மற்றும் இதர கூறுகளின் அடிப்படையில் குடியுரிமை பிரிக்கப்படும் எந்த ஒரு நாட்டையும் நான் ஆதரிக்க மாட்டேன். அனைத்து நாடுகளிலும் சமத்துவம் நிலவ வேண்டும். இதுதான் என் நம்பிக்கை,” என்று அவர் கூறியுள்ளார்.
பாலஸ்தீனர்களின் சர்ச்சைக்குரிய ‘க்ளோபலைஸ் தி இண்டிஃபாதா (Globalise the Intifada)” என்ற முழக்கத்தில் இருந்து அவர் விலகி நிற்கவில்லை. இண்டிஃபதா என்பது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற பாலஸ்தீன போராட்டங்களைக் குறிப்பிடும் சொற்றொடர் ஆகும்.
இது தொடர்பாகப் பேசிய அவர் “இந்த முழக்கம் மனித உரிமைகளுக்கான பாலஸ்தீன மக்களுடைய போராட்டத்தின் அடையாளம்” என்றும் கூறியுள்ளார். “இது சமத்துவத்திற்கான குரல். வன்முறைக்கான குரல் இல்லை” என்றும் அவர் கருதுகிறார்.
ஆனால் அவரது கருத்தை விமர்சிக்கும் பலரும், இந்த முழக்கம் சர்வதேச அளவிலான வன்முறைக்கு வழி வகுக்கிறது. இது யூத வாக்காளார்கள் மத்தியில் அச்சத்தைப் பரப்புகிறது என்று குறிப்பிடுகின்றனர்.
உடை, உணவு, இருப்பிட இலவசப் பேருந்து சேவை:
மம்தானி உடை, உணவு, இருப்பிடம், இலவசப் பேருந்து சேவை போன்றவற்றை முன்னிருத்தி தனது பிரசாரத்தை நடத்தி வருகிறார். சாமானியர்களின் குரலாக இருக்க ளிடம் விரும்புவதாக பொதுமக்கஅவர் தொடர்ந்து வாக்குறுதி கொடுத்துள்ளார்.இலவசப் பேருந்து சேவை, அனைத்து குழந்தைகளுக்குமான பாதுகாப்பு, நகரசபையால் நடத்தப்படும் கடைகள், மலிவு விலை வீடுகள், இதன் அடிப்படையில் அவர் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்து வருகிறார். பிபிசியிடம் பேசும்போது, மம்தானி, இந்த நகரத்தில் நான்கில் ஒருவர் என்ற அளவில் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். ஐந்து லட்சம் குழந்தைகள் தினமும் இரவு பசியோடு உறங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.
இந்த நகரைச் சிறப்பாக மாற்றும் அடையாளத்தை இந்த நகரம் இழந்து வரும் அபாயத்தில் உள்ளது என்று அவர் எச்சரித்தும் கூறியுள்ளார். அவரது தீவிர பிரசாரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ – கோர்டெஸ் மற்றும் செனெட்டர் பெர்னி ஸாண்டர்ஸ் ஆகியோர் மட்டுமே ஆதரவளித்து உள்ளனர்.
![]()