பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் மோதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் குடும்ப மயானத்தில் நடைபெற்றன.
இமந்த சுரஞ்சன் என்ற 22 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவரார்.
இன்று பிற்பகல் அந்த இளைஞனின் இறுதிச் சடங்கைத் தொடர்ந்து பொலிஸாருக்கு பிரதேசவாசிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பை வழங்க சுமார் 150 பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட இளைஞனின் உறவினர்களும் பிரதேசவாசிகளும் பொலிஸார் மீது குற்றம்சாட்டி அவர்கள் மீது கற்களை வீசியுள்ளனர்.
பின்னர் பிரதேசவாசிகளை கட்டுப்படுத்த கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.
கண்ணீர் புகை பிரயோகத்தில் பிரதேசவாசிகள் சிலர் காயமடைந்ததாக எமது நிருபர் தெரிவித்துள்ளார்.
![]()