முச்சந்தி

உகந்தையில் இருந்து கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு

ஜூலை 26ஆம் திகதி நடைபெறவுள்ள கதிர்காம முருகன் ஆலயத்தின் கொடியேற்ற விழாவை முன்னிட்டு, பக்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை காட்டுப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

பக்தர்களுக்காக அமைந்துள்ள லகுகலை – உகந்தை வன பாதையின் கதவு, இன்றையதினம் காலை 6.00 மணியளவில் உகந்தை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிற்குப் பிறகு திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆரோஹரா” கோஷங்களுடன் பக்தர்கள் தங்களது காட்டுப்பாதை பயணத்தை இன்று தொடங்கினர். கதிர்காம திருவிழா ஜூலை 26 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, ஜூலை 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

இதேவேளை, இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2025 ஜூலை 4ஆம் திகதி முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button