முச்சந்தி

தையிட்டி விகாரைக்கு வழிபடவந்த பெரும்பாண்மை இன இளைஞன் கஞ்சாவுடன் சிக்கினார்!

தையிட்டி விகாரைக்கு வழிபட வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் கஞ்சாவுடன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

தையிட்டி விகாரைக்கு வழிபட வந்த நபர் அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை பொலிஸார் அவதானித்தனர்.

அதன்பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் கஞ்சா மீட்கப்பட்டது. அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பௌர்ணமி தினமான சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றக்கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் நிலமீட்பாளர்கள் தமது நிலத்தை மீட்டுத் தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தென்பகுதியில் இருந்து பெரும்பான்மை இனத்தவர் பலரை அழைத்து வந்து பூஜை வழிபாடுகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button