முச்சந்தி

குடும்ப பிரச்சினையை தீர்க்க சிஐடிக்கு செல்லும் அநுர தரப்பு – கடுமையாக சாடிய தயாசிறி

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதிலும் முறைகேடு இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு இந்த அரசாங்கத்தின் செயற்திறன் காணப்படுகிறது. இந்த அரசாங்கம் ‘எப் போர்ட்’ என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட கருத்து இன்று உண்மையாகியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் திருட்டு கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டம் தொடர்பில் உண்மை வெளிவந்ததன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்தார்கள்.

ஆளும் தரப்பின் உறுப்பினரது குடும்ப பிரச்சினைக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றார்கள்.

ஜனாதிபதி அனுமதியில்லாமல் முறைகேடான வகையில் கைதி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை வெளிவந்துள்ளது.

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதிலும் முறைகேடு இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு இந்த அரசாங்கத்தின் செயற்திறன் காணப்படுகிறது.

இவர்கள் வாய்ச்சொல் வீரர்களே, தவிர செயல் வீரர்களல்ல, தான்தோன்றித்தனமாக செயற்படுவது மாத்திரமே அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button