உலகம்

ரஷ்ய ஜனாதிபதி புடினின் செயற்பாடுகள் குறித்து ட்ரம்ப் அதிருப்தி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அண்மைய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.

ஒரே இரவில் அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பது இதுவே முதன் முறையென சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்காக மாஸ்கோ மீது அதிக அழுத்தம் கொடுக்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மீண்டும் நட்பு நாடுகளை வலியுறுத்தியதுடன் அமெரிக்காவின் மௌனம் புடினை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

ரஷ்ய ஜனாதிபதி போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாகவும் செலென்ஸ்கியின் கூற்று அமைந்திருந்தது.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்பாடுகள் குறித்து ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

புடின் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் என ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ள ட்ரம்ப் உக்ரைன் மீது பாரியளவான ஏவுகனை தாக்குதல்களை மேற்கொண்டு மக்களை அழிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *