பாகிஸ்தான் முகவர்களுடன் தொடர்பு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவிடம் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு & காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு மூன்று மாதத்திற்கு முன்பு ஜோதி மல்ஹோத்ரா அந்தப் பகுதிக்கு சென்றுவந்ததும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடையதாக கருதப்படும், டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிவந்த டேனிஷ், ஜோதி மல்ஹோத்ராவை ஹனி டிராப் மூலம் தன் வலையில் சிக்கவைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த அடிப்படையில், ஐஎஸ்ஐக்கு முக்கியமான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் ஜோதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சேஷ் பால் வைத் தனது எக்ஸ் பக்கத்தில், ஜோதி மல்ஹோத்ரா குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.
‘பாகிஸ்தான் தூதரக பணியாளர் டேனிஷ் ஹனி டிராப்பில் விழுந்த ஜோதி மல்ஹோத்ரா கடந்த ஜனவரி மாதம் பஹல்காம் வந்தது தற்செயலா? அவர் (ஜோதி) ஐ.எஸ்.ஐக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. பொதுவாக நமது உளவுப் பிரிவு, யார் அடிக்கடி எதிரி நாட்டுக்கோ அல்லது அந்நாட்டு தூதரகத்திற்கோ அதாவது சீனா,
பாகிஸ்தான் தற்போது பங்களாதேஷ் சென்றுவருகிறார்களோ அவர்களை தீவிரமாக கண்காணிப்பார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
![]()