ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (24) திருகோணமலை உவர்மலை லோவர் வீதியில் (ஆளுநர் செயலக வீதி) உள்ள உவர்மலை பூங்காவில் மதியம் 2.30 மணியளவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருகோணமலை ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலும், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒத்துழைப்புடனும் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுகிர்தராஜனின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளனர்.

திருகோணமலை துறைமுகத்தில் கடமையாற்றி வந்த சுகிர்தராஜன் 24.01.2006 அன்று காலை ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உள்ள வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தார். இதன் காரணமாக அவர் குறிவைக்கப்பட்டிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *