இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும்

இலங்கையில் தமிழருக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும் அத்துடன் கச்ச தீவை மீட்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பேன் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.இதன்போது,

இலங்கையில் தமிழர்களை கொன்று விட்டார்கள். அது ராஜீவ் காந்தி அரசுதான், ஆனால், மோடி அரசு அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு உருவாக்கி கொடுக்க வேண்டும். அதற்காகத் தான் மோடியை சந்தித்து வருகிறேன்.

இலங்கை மீனவர்களை கைது செய்யக் காரணம் கச்ச தீவை நாம் இழந்தது தான். இவை அனைத்திற்கும் காரணம் காங்கிரஸ் அரசுதான். இந்தியாவில் ஒரு இடத்தில் கூட அந்தக் கட்சியை ஜெயிக்க விடக்கூடாது. கச்ச தீவை மீட்பதற்கு பிரதமரிடம் கோரிக்கை வைத்து வருகிறேன். தமிழர்களுக்கு குரல் கொடுத்தே தீர வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *