முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்கப்படும்
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது பிரதி அமைச்சர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி கூறியவாறே கொள்கைத் திட்டங்கள் செயற்படுத்தப்படும். பொதுவான கொள்கையையே ஜனாதிபதி கூறியுள்ளார். தனக்கும் உத்தியோகபூர்வ இல்லம் அவசியமில்லை என்று கூறியுள்ளார். அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போதுள்ள ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட உடனேயே அவர்களின் சிறப்புரிமைகள் நீக்கப்படும். மக்கள் இவற்றை இல்லாமல் செய்வதற்காகவே ஆணையை வழங்கியுள்ளனர். தேர்தல் மேடைகளில் நாங்கள் கூறியவற்றை அவ்வாறே நிறைவேற்றவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
![]()