வெள்ளை மாளிகைக்குள் நடக்கும் டிரம்பின் பதவியேற்பு விழா; ஒரு பார்வை!
இன்று இரவு 10:30 மணிக்குப் பதவியேற்பு விழா தொடங்கவுள்ளது. அமெரிக்காவின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்பிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். டிரம்பைத் தொடர்ந்து, துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்கவுள்ளார்.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு உலகத் தலைவர்களும், பெரும் தொழிலதிபர்களும் வாஷிங்டனில் கூடியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 78 வயதான டொனால்டு டிரம்ப், 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2-ஆவது முறையாக அதிபராகவுள்ளார். இதற்காக, வெள்ளை மாளிகையில் ஏற்பாடுகள் தயாராகியுள்ளன. வழக்கமாக வெள்ளை மாளிகையின் வெளிப்புறத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் நிலையில், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், ஆராதனை, பதவியேற்பு, அதிபர் உரை, ராணுவ அணிவகுப்பு என அனைத்தும் வெள்ளை மாளிகையின் உள்ளரங்கிலேயே நடத்தப்படவுள்ளது.
இதற்கு முன்பாக, 1985-ஆம் ஆண்டு ரொனால்ட் ரீகன் பதவியேற்கும் போது, கடும் பனிப்பொழிவு காரணமாக அனைத்து நிகழ்வுகளும் உள் அரங்கிலேயே நடத்தப்பட்டது. மேலும், 2020-ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து சூறையாடிய இடத்தில்தான் தற்போது டிரம்பின் பதவியேற்பு விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
![]()