சீனாவுக்கு எதனையும் விற்கவில்லை

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை நோக்கி நாடு பயணிக்கின்றது என்றும், இது தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களின் புரிந்துணர்வுகள் அவசியம் என்றும் ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ரில்வின் சில்வா இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

நாங்கள் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளோம். அரசியல் பழிவாங்கல்களை கலாசாரத்தை இல்லாமல் செய்துள்ளோம். பொதுமக்களின் நிதிகளை வீணடிப்பதை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதவியேற்புகளுக்காக நிகழ்வுகளை நடத்தவில்லை. மக்கள் பணத்தை சேமித்துள்ளோம். அத்துடன் பல்வேறு நிவாரணங்களையும் வழங்கத் தொடங்கியுள்ளோம்.

நாங்கள் வந்ததும் வரிசை யுகத்திற்குள் நாடு செல்லும் என்று எமது எதிரிகள் கூறினர். ஆனால் அந்த நிலைமை கிடையாது. எரிபொருள் விலைகளை குறைத்து வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

இதேவேளை சீனாவுக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டுள்ளார். சீனாவுக்கு நாங்கள் எதனையும் விற்கவில்லை. உதவிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். உடன்படிக்கைகள் பலவற்றை செய்துகொண்டுள்ளோம். இவை எமது வெற்றிகள்தானே. ஆனால் எமக்கு எதிரானவர்கள் அரசாங்கத்தை பற்றி பல்வேறு விமர்சனங்களை செய்தனர். ஆனால் அந்த விமர்சனங்கள் பொய்யாகியுள்ளன.

புரிந்துகொள்ளலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கஷ்டமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது மக்களை அது தொடர்பில் புரிந்துகொள்ளச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்றத்திற்காக 5 வருடங்களுக்கான ஆணையை மக்கள் வழங்கியுள்ளனர். அந்த வகையில் கிளீன்வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இடையூறுகள் வரலாம். ஆனால் அவற்றையும் கடந்து வெற்றிகளை பெற்றுக்கொள்வோம். அழகாக நாட்டை மாற்ற வேண்டும். அதன்போது கல்வியால் உயர்ந்த சிறந்தவர்களையும் உருவாக்க வேண்டும் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *