கோதாவிடம் அநுர ஆலோசித்திருக்கலாம்

அநுரவின் அரசாங்கம் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷவிடம் அது தொடர்பான ஆலோசனைகளை பெற்றிருந்தால் அதனை சிறப்பாக முன்னெடுத்திருக்கலாம் என்று ராஜபக்‌ஷக்களின் சட்டத்தரணியான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்  முன்னாள் ஜனாதிபதி வாக்குமூலமளித்து வெளியேறிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி மனோஜ் கமகே இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கதிர்காமத்தில் உள்ள ஜீ.ராஜபக்‌ஷ என்பவரின் காணியொன்றுக்கு மின் இணைப்பை பெற்றுக்கொண்டமை தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காகவே கோதாபய ராஜபக்‌ஷ இங்கே அழைக்கப்பட்டுள்ளார். இதுவொரு நகைப்புகைக்குரியது. இந்த அரசாங்கம் எதனையாவது செய்ய வேண்டும் என்பதற்காக செய்கின்றது. இந்நிலையில் கோதாபய ராஜபக்‌ஷவை இவ்வாறு விசாரணைக்கு அழைப்பதால் எந்தப் பலனும் கிடையாது. அத்துடன் கிளீன் ஶ்ரீலங்கா நாட்டில் பயனற்றதாகவும் உள்ளது. இதனை செய்ய முன்னர் கோதாபய ராஜபக்‌ஷவிடம் ஆலோசனைகளை பெற்று இந்த வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்திருக்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *