வீழ்ந்த கட்சியை மீட்டெடுத்து மீண்டும் வெற்றி இலக்கை அடைய முற்படுவோம்

வீழ்ந்த கட்சியை மீட்டெடுத்து வெற்றி இலக்கை நோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகதத்தில்  செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் நிலைப்பாட்டுக்கு இடமளிக்க வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்க்கின்றோம். இதனால் கட்சியை மறுசீரமைக்கும் பணி நடக்கின்றது. வெற்றியே எமது இலக்கு. மக்கள் கைகளிலேயே அது தங்கியுள்ளது. எமது கட்சியின் முன்மாதிரியான தலைவர் மகிந்த ராஜபக்‌ஷவே. அவர் இருக்கும் போது நாட்டினதும், கட்சியினதும் தலைவராக இருப்பார். கீழ் மட்டத்தில் இருந்து புதிய முகங்களை கட்சியில் இணைக்கின்றோம். நாங்கள் புதிய பாதையில் கட்சியை கொண்டு செல்வோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *