தமிழரசுக்கட்சியில் இளையோரை இணைந்து கொள்ளுமாறு பதில் தலைவர் சி.வி.கே. அழைப்பு !

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அதிகமான சபைகளை கைப்பற்றுவதில் இலங்கைத் தமிழரசுக்கட்சி தீவிரமான கவனத்தினைச் செலுத்தியுள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சியினை அடுத்த சந்ததிக்கு உரியவாறு கையளிப்பதற்காக இளையோரில் அதிகளவானவர்கள் எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் பகிரங்கமான அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போது தான் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் காணப்படுகின்றன என்பதற்கு அப்பால் வடக்கு,கிழக்கு மக்களின் பெரும்பான்மையான அங்கீகாரமும் ஆதரவும் கட்சிக்கே உள்ளது என்பது கடந்த காலத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

அந்த வகையில் வடக்கு,கிழக்கில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் ஆளுகையைப் பெறும் நோக்குடன் கட்சி அடுத்தகட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்காக கட்சியில் இளைய சந்ததியினரையும், பெண்களையும் இணைந்து கொள்ளுமாறு பகிரங்;கமான கோரிக்கை விடுகின்றேன். கட்சியின் அனைத்துப் பின்னடைவுகளையும் கடந்து எமது பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமான விடயமாகும்.

ஆகவே, எதிர்கால சந்ததியினர் கட்சியுடன் கரம்கோர்த்துககொள்வதன் ஊடாகவே கட்சியில் உண்மையான மாற்றம் ஏற்படும். அந்த வகையில் உள்ளுராட்சி தேர்தலில் புதிய முகங்களை உள்ளீர்த்துக்கொள்வதற்கு கட்சி தயாராகவே உள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *