20 நிமிடத்தில் 2 போத்தல் மது குடிக்கும் போட்டி

தாய்லாந்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம், YouTube பிரபலம் காந்தே என்ற 21 வயது இளைஞர். உலகம் முழுவதும் புத்தாண்டை மகிழ்ச்சியாக தொடங்கிய நிலையில் காந்தே ஒரு சவாலோடு தொடங்கியுள்ளார்.

நண்பர்களோடு புத்தாண்டை கொண்டாட சென்ற காந்தேவுக்கு நண்பர்கள் ஒரு சவால் விட்டுள்ளனர்.

அதன்படி, காந்தே 20 நிமிடத்திற்குள் 2 மதுப்பாட்டில்களை முழுவதுமாக குடித்து முடித்தால் 75 ஆயிரம் ரூபா தருவதாக சவால் விட்டுள்ளனர்.

சவாலை ஏற்றுக் கொண்ட காந்தேவும் 350 மில்லிமீற்றர் கொள்ளளவு கொண்ட 2 விஸ்கி போத்தல்களை வாங்கி வேக வேகமாக குடித்துள்ளார்.

குடித்து முடித்த சில நிமிடங்களிலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மது போதையில் இருந்த அவருக்கு சரியான சிகிச்சைகள் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *