இந்தியா

75 வயது மேற்பட்டவர்கள் இனி வரி செலுத்த வேண்டாம்!

இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை, ஏனெனில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியதில்லை. 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதிலிருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கும் நிபந்தனைகளை வழங்குகிறது.

மூத்த குடிமகன் 75 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மூத்த குடிமக்கள் முந்தைய ஆண்டில் ‘குடியிருப்பு’ ஆக இருக்க வேண்டும். இப்படி ஒரு விளம்பரம் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என இந்திய மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *