இந்தியா

பெங்கல் புயல்: சென்னை விமான நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வங்கக்கடலில் நேற்று உருவான பெங்கல் புயல், தமிழ்நாட்டின் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக சென்னையில் இன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், விமான நிலையத்தில் உள்ள மக்கள் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

விமான நிலையத்தில் இருந்து பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *