செய்திகள்

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்; 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் நேற்று இரவு பாதுகாப்பு படையினரின் சோதனைச் சாவடி மீதே பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வெடிகுண்டுகள் நிரப்பிய கார் ஒன்றை சோதனைச் சாவடி மீது மோதச் செய்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.

குண்டுவெடிப்பை தொடர்ந்து பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களிடையே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த இராணுவ வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அந்த பகுதியில் அதிக அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *