முச்சந்தி

அரசின் பொய் அரசியல் பாரிய பேரழிவாகிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

ஏழு துயரங்களை எதிர்கொண்ட மக்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் பொய் அரசியல் பாரிய பேரழிவாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தெற்கில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நிர்க்கதிக்குள்ளாகியுள்ள நாட்டின் மக்களை ஏமாற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு ஆட்சியாளர்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

கடந்த ஏழு வருடங்கள் போன்ற குறுகிய காலப்பகுதிக்குள் இந்நாட்டு மக்கள் ஐந்து பிரதான பேரழிவுகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

அதன்படி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் ,கொரோனா பெருந்தொற்று ,நாடு வங்குரோத்து அடைந்தமை ,டித்வா சூறாவளித்தாக்கம் ,மத்திய கிழக்கு யுத்தம் ஆகிய ஐந்து பேரழிவுகளுக்கும் கடந்த ஏழு வருடங்களுக்குள் இந்நாட்டு மக்கள் முகம் கொடுத்துள்ளனர்.

தற்போது நாட்டில் உள்ள பாரிய பேரழிவு பொய் அரசியலாக மாறியுள்ளது. பொய்யையும் ஏமாற்றுவித்தையையும் மேலும் தங்களது அன்றாட வழக்கத்தின் மிக உயர்ந்த செயல்பாடாக மாற்றிக்கொள்ள இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அது இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button