பெண் சபாநாயகர்; தேசிய மக்கள் சக்தி ஆலோசனை
புதிய நாடாளுமன்றத்தில் சபை முதல்வராக அமைச்சர் விஜித ஹேரத்தையும் ஆளுங்கட்சியின் கொறடாவாக கே.டி.லால் காந்தவையும் நியமிக்க தேசிய மக்கள் சக்தி ஆலோசனைகளை நடத்தியுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற உள்ளது. காலை 10.00 மணிக்கு சபை அமர்வுகள் ஆரம்மாகி சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெறும். அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றும் நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சம்பிரதாய பூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டு ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரைக்காக மீண்டும் காலை 11.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்.
இதேவேளை, புதிய சபாநாயகராக பெண் ஒருவரை நியமிக்கும் ஆலோசனைகளை தேசிய மக்கள் சக்தி நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
நாளைமறுதினம் 20ஆம் திகதி ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை நடத்த உத்தேசித்துள்ளடன், இதன்போது இந்த விடயம் இறுதி செய்யப்படும் எனவும் தெரியவருகிறது
சபை முதல்வராக அமைச்சர் விஜித ஹேரத்தையும், ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் லால் காந்தவையும் நியமிக்க தேசிய மக்கள் சக்தி ஆலோசனைகளை நடத்தியுள்ளது. இதுகுறித்த இறுதி முடிவும் ஆளுங்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.