தமிழ் அரசியலிலும் சிரமதானம் நடந்துள்ளது
சிங்கள அரசியலை போன்று தமிழ் அரசியலிலும் சிரமதானம் இடம்பெற்றுள்ளது என்றும், இதனுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை முதலாவது அமர்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது சாணக்கியன் மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது கிடையாது. இலங்கை தமிழரசுக் கட்சியே பிரதான கட்சியாகும். நாங்கள் தமிழ் அரசியலிலும் சிராமதானம் செய்துள்ளோம். தமிழ் அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களும் இருந்தனர்.
இதனால் இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மக்கள் எங்கள் கட்சியிலும் சிரமதானம் செய்துள்ளனர். தேர்தல் பெறுபேறுகளை பார்க்கும் போது 2020 தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 6 ஆசனங்களே கிடைத்திருந்தன. ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது 20 வரையில் உயர்வடைந்துள்ளது