Featureஇலங்கைகலைஞர்கள்நேசம் நாடும் நெஞ்சங்கள்

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை

கொழும்பில் காசோலை மோசடி சம்மந்தமாக வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் தலா பத்து மில்லியன் ரூபா காசோலைகளை வழங்கி அன்றைய தினத்தில் கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்து காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக குறித்த வர்த்தகருக்கு எதிராக டக்ளஸ் தேவானந்தா முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பாக அந்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் வழக்கிற்கு டக்ளஸ் ஆஜராகாமல் வந்துள்ளார்.

இது தொடர்பாக இரகசிய பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால் நீதிமன்றில் ஆஜராக மாட்டார் என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

அதேவேளை வழக்கின் முதல் சாட்சியான தேவானந்தாவுக்கு சாட்சியமளிப்பதற்கான கடைசித் திகதி வழங்கப்பட்டுள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பத் ஹேவா பத்திரன நீதிமன்றில் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதத்தையும் பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் சாட்சியான டக்ளஸ் சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் நீதவான் பசன் அமரசேன சாட்சிக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டு வழக்கை அடுத்த விசாரணைக்காக 2025 ஆண்டு ஜனவரி 23ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.