தேர்தலின் முதலாவது முடிவு: இன்று இரவு 11 மணிக்கு

ஜனாதிபதித் தேர்தலில் முதலாவது தேர்தல் முடிவு இன்று இரவு (21) 11 மணிக்கு வெளியிடப்படும் என எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான விசேட நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்க அனைத்து மின்னணு ஊடகங்களும் தயாராக காணப்படுகின்றன.

ஏதோ ஒரு விதத்தில் இரண்டாவது விருப்பு வாக்கை எண்ண வேண்டிய தேவை ஏற்படின் இறுதி முடிவுகளை வெளியிட ஒரு நாள் அல்லது அதற்கும் மேலதிக நாட்கள் எடுக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button