முச்சந்தி

யாழ். கைதடியில்  கைபேசியில் காணொலி பதிவு செய்தவாறு வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் மோட்டார் சைக்கிள் – கனரக வாகனம் மோதுண்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த இரு இளைஞர்களும் தமது கைத்தொலைபேசியில் காணொளி பதிவு செய்தவாறு அதி வேகமாக மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து,எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையிலேயே சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த நிசாந்தன் நிதர்சன் (வயது 23) மற்றும் கமலேந்திரன் கஜந்தன் (வயது 20) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *