கவிதைகள்
வண்ணத்துப்பூச்சி…. கவிதை….முல்லைஅமுதன்

வண்ணத்துப் பூச்சி ஒன்று
என்னைப் பெற்றெடுத்தது.
பாடசாலையில்
வரைந்ததாக
மகள் தந்ததாக காட்டினாள்.
அவளின்
அம்மாவும் வண்ணத்துப்பூச்சியா?
மனைவி
அழைத்துச் சென்று தன் தோட்டத்துச் செடியில்
அமர்ந்திருந்த
வண்ணத்துப்பூச்சியை காட்டினாள்.
பூக்களும் அழகாயிருந்தன.
அன்றைய இரவு
இறக்கைகளற்று அறையில்
அலைந்துகொண்டிந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி..
யாரைத் தேடுகிறது?
எதையோ தொலைத்திருந்தபோலிருந்தது.
இறக்கைகள் எங்கே தொலைந்தன?
வண்ணத்துப்பூச்சி
அம்மாவாகியது.
தோட்டத்தில் பூக்கள் பூப்பதில்லை.
மகள் இன்றும் வரைந்து வந்திருந்தாள்.
கைகளுக்குள்
பத்திரப்படுத்தி வைதிருக்கிறேன்.
![]()