பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டமூலத்தை திருத்தங்களுடன் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலத்தை திருத்தங்களுடன் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமென உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரைக்காக கூடியநிலையில் இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே இந்த அறிவிப்பை வெளியிடட சபாநாயகர் மேலும் அறிவிக்கையில்,
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்சவாலுக்குட்படுத்தப்பட்ட “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதைபாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன்.
பின்வரும் திருத்தங்களை (அவற்றில் மூன்று மேலதிக மன்றாடியார் அதிபதியினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன) குழுநிலையில் மேற்கொண்டதன் பின்னர், பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும்
என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது
குழுநிலைப் பரிசீலனையின் போது, 26(2) ஆம் உட்பிரிவில் “அத்தகைய பொலிஸ் அலுவலரின் விண்ணப்பத்தின் பேரில்” என்னும் சொற்றொடரை உட்புகுத்துவதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். மேற்படி உட்புகுத்தலுடன், 26(2) ஆம் உட்பிரிவு பின்வருமாறு அமைய வேண்டும்.
(1) ஆம் உட்பிரிவின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நீதவான் முன்னிலைக்கு கொண்டுவரப்படுவதன் போது, புலனாய்வை மேற்கொள்கின்ற பொலிசு அலுவலர், மேலதிகவிசாரணையை மேற்கொள்வதற்காக சந்தேகநபரை மேலும் நீடிக்கப்பட்ட காலத்திற்கு தடுத்து வைத்திருப்பது அவசியமானது என நியாயமான ஏதுக்களைக் கொண்டிருக்கும்சந்தர்ப்பத்தில், நீதவான், எழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களின்அடிப்படையில், அத்தகைய பொலிசு அலுவலரின் விண்ணப்பத்தின் பேரில்,அத்தகைய சந்தேகநபரை மேலும் இருபத்துநான்கு மணித்தியாலங்களுக்கு மேற்படாத காலப்பகுதிக்கு பொலிஸ் காவலில் வைத்திருக்கப்படுவதற்கு அதிகாரமளிக்கப்படலாம்.
நீதித்துறை மேற்பார்வையை வினைத்திறன் மிக்கதாக்கும் பொருட்டு, 59(5)(ஆ) ஆம்பந்தியில் “மேன்முறையீட்டு நீதிமன்றம்” என்னும் சொற்றொடருக்குப் பதிலாக “உயர்நீதிமன்றம்” என்னும் சொற்றொடரை இடுவதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
தேவையற்றதாகக் கருதப்படுவதன் அடிப்படையில், சட்டமூலத்திலிருந்து 60(7) ஆம்உட்பிரிவை நீக்குதல்; மற்றும் 66(1) ஆம் உட்பிரிவை பின்வருமாறு மீளமைத்தல் வேண்டும்.
“இச்சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட அல்லது ஆக்கப்பட்ட ஒரு பணிப்புரை, பணிப்புஅல்லது கட்டளை அல்லது விடுவிக்கப்பட்ட ஒரு பணிப்பு, அரசியலமைப்பின் 126 ஆம்,140 ஆம் அல்லது 141 ஆம் உறுப்புரைகளின் கீழான நடவடிக்கைளில்கேள்விக்குட்படுத்தலாம்.
உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகாரஅறிக்கையில் பதிப்பிட வேண்டுமென நான் கட்டளையிடுகின்றேன் என்றார்
![]()