முச்சந்தி
ஏழைகளின் வறுமையை ஒழிக்கத் தவறிய பட்ஜெட்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

ஏழை மக்களின் வறுமையை ஒழிக்க எந்த ஒரு வேலைதிட்டத்தையும் ஜனாதிபதி தனது வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை தொடர்பில், கருத்து தெரிவிக்க இலையே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் வறுமை நிலை மற்றும் வேலை இல்லா நிலைமை அதிகரித்துள்ளது. ஆனால் அரசாங்கம் தனது வரவு செலவு திட்டத்தில் அது தொடர்பில் எந்த ஒரு வேலை திட்டமும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவில்லை. இது தொடர்பான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
![]()