கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பார்வையிட்ட ஸ்டாலின்: முதலீடு செய்ய அழைப்பு

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளை சந்தித்தார்.

இங்குள்ள முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் தொழில்களை ஆரம்பிக்குமாறு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவில் உள்ள ஆப்பிள், கூகுள் , மைக்ரோசாப்ட் நிறுவனங்களையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

அவர், முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஆசியாவில் தொழில் வளர்ச்சி மையமாக தமிழகத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழகத்தின் முதலீடு செய்யுமாறு கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தேன். தமிழகத்தை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம்’ என பதிவிட்டுள்ளார்.

சென்னையில் செயற்கை ஏ.ஐ., ஆய்வகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button