இலங்கை

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் விடயத்தில் உரிய நேரத்தில் செயற்பட்ட பைஸர் முஸ்தபா குழுவுக்கு நன்றி

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் விடயத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி உரிய நேரத்தில் செயற்பட்ட பைஸர் முஸ்தபா தலைமையிலான குழுவினருக்கு அரசாங்கம் சார்ப்பில் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை தொடர்பிலும் அவரை அதில் இருந்து பாதுகாப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த சபைக்கு தெரிவித்த விடயங்கள் தொடர்பில் பைஸர் முஸ்தபா எம்.பி.க்கு நாடு என்ற வகையிலும் அரசாங்கம் என்றவகையிலும் இந்த சபையை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர் என்றவகையிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்களும் உங்களுடன் சென்ற பிரதிநிதிகளும் நாட்டை பிரதிநித்துவம் செய்தீர்கள். நாங்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல், நாடு பிரதிநிதித்துவம் செய்ய வேண்டிய நேரத்தில். பிரதிநிதித்துவம் செய்திருப்பதை காட்டி இருக்கிறோம்.அதனால் அந்த குழுவுக்கு தலைமைத்துவம் வழங்கி செயற்பட்டமைக்கு அரசாங்கம் சார்பில் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எனது நன்றியையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *