முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸிடம் 3 மணி நேரம் விசாரணை

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் நேற்று செவ்வாய்க்கிழமை இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இந்த ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே அவர் நேற்று காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகியிருந்த அதேவேளை,சுமார் மூன்று மணித்தியாலம் அவரிடம் வாக்குமூலப் பதிவு செய்யப்பட்டது.
ஜீ.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுக்கு அமைவாகவே அவரிடம் மேற்படி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்த பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக தம்மை ஆணைக்குழு அழைத்துள்ளதாகவும், அதற்கு ஆஜராக தாம் தயார் என்றும் குறிப்பிட்டிருந்த நிலையிலேயே, அவர் ஆணைக்குழுவில் ஆஜராகி, மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருக்கிறார்.
![]()