செம்மணிப் புதைகுழி என்புக் கூடுகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர் குழுவின் பெயர் விபரங்கள் அடுத்த வாரம் தாக்கல்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட என்பு கூடுகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர் குழுவின் பெயர் விபரங்களை அடுத்த வாரம் தாக்கல் செய்வதாக சட்ட வைத்திய அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் செம்மணி புதைகுழி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சட்ட வைத்திய அதிகாரியினால் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
எலும்புகளின் பரிசோதனை சம்பந்தமான நிபுணர் குழுவை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும், பிற்பாடு அது சம்பந்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது சம்பந்தமாக நிர்வாகக் குழு கூட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக எதிர்வரும் மாதம் 19ம் திகதி மதியம் 2.30 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
காபன் பரிசோதனைக்கு வலியுறுத்து
இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் மற்றும் தடயப் பொருள் மாதிரிகளுக்கு காபன் பரிசோதனையை செய்ய வேண்டும் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் வலியுறுத்தப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழியின் காலப்பகுதியை கண்டறியும் வகையில் காபன் (சி14) பரிசோதனைக்கு மிக விரைவாக இந்த மாதிரிகளை அனுப்பப்பட வேண்டுமென குற்றப் புலனாய்வு திணைக்களம் விண்ணப்பம் செய்தது.
இந்நிலையில் எதிர்வரும் 19ம் திகதி செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான நிர்வாகக் கூட்டத்தில் முடிவெடுத்ததன் பிற்பாடு அது சம்பந்தமாக தீர்மானிக்கப்படும் நீதிவானால் தெரிவிக்கப்பட்டது.
![]()