இலங்கை

ஞானசாரர் விவகாரம் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி

இனவாதம் மற்றும் மதவாதத்தை தோற்கடித்து உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இருக்கும் வரை, இனி நாட்டில் இனவாதத்திற்கு இடம் இல்லை என்றும் ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர் எனவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

“அநுராதபுர புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தின்போது, அங்குள்ள பாரம்பரியமிக்க இடங்களை அழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ‘ஜாதிக சங்விதான எக்கமுதுவ’ அமைப்பின் வசந்த பண்டார குற்றம்சாட்டுகிறார். வர்த்தமானி அறிவித்தலில் இல்லாத விஷயங்களைத் திரித்துக் கூறி, மக்களைத் திசைதிருப்ப அவர் முயற்சிக்கிறார். விமல் வீரவன்சவின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கே அவர் முயல்வது போல் தெரிகிறது. இவர்களின் பொய்யான வதந்திகளை நம்புவதற்கு மக்கள் தயார் இல்லை என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ராஜபக்சக்களுக்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றித் தருவதற்காக, ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும்; அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்டத்தின் செயல்பாட்டில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது.

அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்டு, பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். இன்று நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *