இந்திய பெண் மருத்துவர் கொலை சம்பவம்: சிறையில் முட்டை நூடுல்ஸ் கேட்ட சஞ்ஜய் ராய்
இந்தியாவின் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயற்சி வைத்தியரின் கொலைக்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்
சம்பவம் குறிதது இரண்டு முறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயற்சி வைத்தியர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செயப்பட்டார்.
இந்த சம்பவத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு மேற்கு வங்க அரசு உதவுவதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஒப்பந்த ஊழியரான சஞ்சய் ராய் என்பவர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் கைது செய்தனர்.
சஞ்சய் ராய் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கைதிகளுக்கு வழமையாக ரொட்டி வழங்கப்படும் நிலையில் தனக்கு ரொட்டி வேண்டாம். முட்டை நூடுல்ஸ் வேண்டும் என சஞ்சய் ராய் அடம்பிடித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெயர் அறிவிப்ப விரும்பாத ஒருவர் இந்த தகவலை தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகளால் கண்டிக்கப்பட்டதன் பின்னர் அவர் கொடுக்கப்பட்ட உணவை ஏற்றுக்கொண்டுள்ளார்.