டிரம்ப் மீதான துப்பாக்கி பிரயோகம் படுகொலை முயற்சி என்கிறது புலனாய்வு; சந்தேக நபர் குறித்த தகவல் வெளியானது

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் உளவுத்துறை அதிகாரியொருவரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபர் தொடர்பிலான தகவல்களை மத்திய புலனாய்வு அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பு என்பது சட்ட அமுலாக்கல் மற்றும் உள்ளக புலன் விசாரணை முகவராக செயற்படும் அமெரிக்காவின் நீதித்துறைக்குச் சொந்தமான அரச முகவர் ஆகும்.

இந்நிலையில் க்ரூக்ஸ் பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்தவர் 20 வயதுடைய இளைஞனே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பிற்கு எதிராக படுகொலை முயற்சி இடம்பெற்றிருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

படுகொலை முயற்சிக்கான காரணத்தை கண்டறிவதற்காக அதிகாரிகள் தீவிர விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button