முச்சந்தி

ஹிஸ்புல்லா எம்.பி.க்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மட்டக்களப்புமாவட்ட எம்.பி . ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தது மற்றும் பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சூறையாடியுள்ள்ளதாகத் தெரிவித்து அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் சனிக்கிழமை மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா எதிராக முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா எம்.பி தொடர்பான சகல ஆவணங்களையும் இறுவெட்டு மூலமும் எழுத்து மூலமும், ஆவண புகைப்படங்களை மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் வழங்கி முறைப்பாடு செய்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button