கவிதைகள்
மகிழ்ச்சியூட்டும்… கவிதை… முல்லைஅமுதன்

கதவுகளைத் திறந்திருக்கவேண்டாமே.
அன்றும்,
சுவாரஷ்யமாக இணையத்தில்
மூழ்கியிருக்க,
மனைவியின் குரல் ஓங்கி ஒலித்தது.
கோபத்துடன் இறங்கிவந்தேன்.
வெளியில் நிற்கையில்
அழகாக ரசித்ததுதான்.
மகளும் ஆசையாய் உணவிடுவாள்.
மாடியறையில் வந்து தங்கிக்கொண்ட
அப் பூனையை
தடிகொண்டு
அதட்டிக் கலைத்தாள்.
முரண்டு பிடித்தது.
ஒவ்வொரு அறையாக ஒளிந்துகொண்டு
விளையாட்டுக்காட்டியது.
எவ்வளவுதான் அது அலைக்கழித்தாலும்
அதனை வருத்துவதில் மனது உடன்படவில்லை.
‘இருந்து போகட்டுமே’
என்றேன் மனைவியுன் முறைப்பையும் மீறி
மகள் மகிழ்ந்தாள்.
அவ்வப்போது வரும் போகும்..
அழகு காட்டும்.
மகிழ்ச்சியூட்டும்…
இன்னொரு குழந்தையாக
வாழ்ந்துக்கொண்டுதான் …. இன்னும்….
![]()