முச்சந்தி

ஒரே கணத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு: மொனராகலை சாலையில் துயர சம்பவம்!

மொனராகலை, கும்பக்கன பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியொன்றும், டிராக்டர் வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய – மொனராகலை வீதியில் உள்ள கும்புக்கன ‘களு’ (Kalu) பாலத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

வெல்லவாயவை நோக்கிச் சென்ற டிப்பர் லொறி, எதிர்த்திசையில் வந்த டிராக்டருடன் மோதியதில் இவ்விபத்து நேரிட்டது.

விபத்து நடந்தபோது டிராக்டரின் இழுவைப் பெட்டியில் (trailer) 10 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் எட்டு பேர் பலத்த காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த ஏனைய மூவரும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக இரு வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button