உலகம்

விக்கிலீக்ஸ் இணைய நிறுவனர் தாயகம் திரும்புவாரா?; இராணுவ இரகசியங்களை வெளியிட்ட நபருக்கு அமெரிக்காவின் தீர்ப்பு

பிரபல அவுஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே இன்று வியாழக்கிழமை (27.06.24) அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை அவர் வெளியிட்டதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்தது.

இதனிடையே பாலியல் வன்கொடுமை வழக்கொன்றில் சிக்கிய அசாஞ்சே கைது செய்யயப்படுவதிலிருந்து தப்பிக்க முயற்சித்து லண்டனில் உள்ள ஈகுவேடார் அரசின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஈகுவேடார் அரசு கடந்த 2019 ஆண்டு அதை மீளப்பெற்றது. இதன் பின்னர் பிரித்தானிய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

லண்டனில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவரை அமெரிக்கா தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அனுமதியளிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் இதற்கெதிராக அசாஞ்சே தரப்பில் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் அவர் அமெரிக்காவுக்கு அனுப்பாடாமால் இதுநாள்வரை வரை லண்டன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் இராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது என்றும் குறைந்த பட்ச சிறை தண்டனையே வழங்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமேரிக்காவிடம் கோரியது.

இதன்பின்னர் அசாஞ்சே , தன்னை விடுதலை செய்வதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அமெரிக்காவை உளவு பார்த்தமை மற்றும் ராணுவ ரகசியங்களை வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதையடுத்து நேற்றுமுன்தினம் லண்டன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அசாஞ்சே நேற்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை (27.06.24) அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பாக்கப்படுகின்றது.

அதனைத்தொடர்ந்து அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் குறைந்தபட்ச சிறை தண்டனை விதிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் அசாஞ்சே ஏற்கனவே லண்டனில் சிறை தண்டனை அனுபவித்ததால், அமெரிக்க நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானதும், ஜூலியன் அசாஞ்சே தனது தாய்நாடான ஆஸ்திரேலியாவிற்கு சுதந்திர மனிதனாக திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.