12 டன் தண்ணீருடன் நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் விமானத்தை வடிவமைத்த சீனா – எதற்காக?
கடலிலிருந்து 12 டன் தண்ணீரை எடுத்துக்கொண்டு நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் திறன் படைத்த விமானத்தை சீனா வடிவமைத்துள்ளது.
AG 600 M என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், நீர்நிலைகளில் பயணித்து கொண்டே, 15 விநாடிகளில் 12 டன் தண்ணீரை உறிஞ்சும் திறன் பெற்றுள்ளது. மேலும், அவ்வாறு உறிஞ்சி சேமித்த நீரை, குறிப்பிட்ட இடத்தில் சரியாக கொட்டும் வகையிலும் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
![]()