அழகான புருவங்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டார்… விளைவு? 4 புருவங்கள்…
தாய்லந்தில் ஒரு பெண் சுமார் ஓராண்டுக்கும் மேல் 4 புருவங்களுடன் வாழவேண்டிய நிலை…
பச்சைகுத்தும் செயல்முறையில் தவறு ஏற்பட்டதே அதற்குக் காரணம் என்று Malay Mail செய்தி நிறுவனம் கூறியது.
32 வயது நிபாப்ரோன் மீகிங் (Nipapron Meeking) எனும் அந்தப் பெண், ராயோங் வட்டாரத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் அந்தச் சேவைக்காக 57 வெள்ளிப் பணம் செலுத்தினார்.
அவர் எதிர்பார்த்ததோ அழகான, அடர்த்தியான புருவங்களை.
அவருக்குக் கிடைத்ததோ கூடுதலாக இரண்டு புருவங்கள்.
அவரது உண்மையான புருவங்களுக்கு மேலே புதிதாக இரு புருவங்கள் பச்சைகுத்தப்பட்டிருந்தன.
அவற்றைக் கண்ணாடியில் பார்த்ததும் நிபாப்ரோனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
நிலையத்தில் இருந்த ஊழியர் மறுநாள் புருவங்களை இலவசமாகச் சரிசெய்து கொடுப்பதாகக் கூறினார்.
ஆனால் மறுநாள் சென்று பார்த்தால், நிலையமே மூடப்பட்டிருந்தது.
நம்பிக்கை இழந்த நிபாப்ரோன் வீட்டில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினார்.
அழகு நிபுணர்கள் பலரை நாடியும் பயனில்லை.
இறுதியாகப் பச்சைகுத்தும் ஒருவர் அவற்றை இலவசமாக அகற்ற முன்வந்ததாக Malay Mail குறிப்பிட்டது.
தற்போது அந்த இரு புருவங்களும் ஓரளவுக்கு மறைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் இயல்பான வாழ்க்கையை வாழமுடிவதாக நிபாப்ரோன் சொன்னார்.
![]()