இலங்கை
பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்படும்

அடக்குமுறை சட்டங்களைப் பயன்படுத்தி ஆட்சி நடத்த வேண்டிய தேவை தங்களுக்கு இல்லை என்றும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மிக விரைவில் முழுமையாக நீக்கப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது இதனை குறிப்பிட்ட அவர், இந்தச் சட்டத்தை நீக்குவதற்கான அனைத்து முதற்கட்ட நடவடிக்கைகளும் ஏற்கனவே தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்படும்.
இவ்வாறான ஒடுக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை ஆள வேண்டிய அவசியம் தங்களுக்குக் கிடையாது என்றும், தங்களுக்குப் பின்னால் பலமிக்க மக்கள் ஆணை இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
![]()