இலங்கை

பாடல் பாடிய ரெப்பர் உள்ளே, துஸ்பிரயோகம் செய்த ரேப்பர் வெளியே; சபையில் எழுந்த கடும் விமர்சனம்

கிளிநொச்சியில் பாடல் பாடிய ‘ரெப்’ (Rap) இசைப் பாடகரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடல் பாடிய ரெப்பர் உள்ளே, துஸ்பிரயோகம் செய்த ரேப்பர் வெளியே; சபையில் எழுந்த கடும் விமர்சனம் | Singer Rapper Jailed Abusive Rapper Freed

அவசரகாலச் சட்டம்

அவசரகாலச் சட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர், வடக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட இளம் பாடகரின் விவகாரத்தைக் குறிப்பிட்டதுடன், “பாடல் பாடிய ரெப்பர் (Rapper) உள்ளே இருக்கிறார்; ஆனால், சிறுமியை சீரழித்த ரேப்பர் வெளியே சுதந்திரமாக உலா வருகின்றார்,” என்று அரசாங்கத்தை விமர்சித்துத் தனது உரையை முடித்தார்.

அண்மையில் கிளிநொச்சி பகுதியில் ‘ரெப்’ (Rap) பாணியிலான பாடல் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இளம் பாடகர் ஒருவர், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் பாடிய பாடலின் வரிகள்,  வன்முறையைத் தூண்டும் வகையிலும் அமைந்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, சட்டத்தை மீறிய பெரும் புள்ளிகள் வெளியில் சுதந்திரமாக இருக்கும்போது, கருத்துச் சுதந்திரத்தின் கீழ் பாடல் பாடிய ஓர் இளைஞனை அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்திச் சிறையில் அடைத்திருப்பது அநீதியானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button