கட்டுரைகள்

முகமூடி அணிந்த பெரிய மனிதர்கள்….  ஏலையா க.முருகதாசன்

(இக்கட்டுரையானது; தங்களைச் சமூகத்தில் பெரிய மனிதர்களாகவும், கல்வியாளர்களாகவும் வெளித் தோற்றத்தில் பொது அவதானிப்புப் புகழுக்காக காட்டிக் கொண்டு,  அதே வேளை உள் மனதில் வக்கிரத்தன்மை கொண்டவர்களாக வளர்த்து அதனை தமது எழுத்தின் மூலம் எழுதி  வருபவர்களுக்கும் நல்லவர்களாக வெளித்தோற்றம் காட்டி நடித்துக் கொண்டிருக்கும் போலி மனிதர்களுக்கும்  மட்டுமேயாகும் என்பதை இதை வாசிக்கும் வாசகர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்)…. -கட்டுரையாளர் 

சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை எழுதுபவர்கள் தமது எழுத்துக்களில் பயன்படுத்தும் சொற்கள் மூலமாக அவரவரின் உள்ளக் கிடக்கைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது இன்று அதிகரித்து வருகின்றது.

இலங்கைத் தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினர் சமூகவலைத்தளங்களில்: பயன்படுத்தப்படும் சொற்கள் அநாகரீகமானவையாகவும்,வக்கிரத்தன்மையுடையனவாகவும்,அருவருப்பானவையாகவும் வாசிக்கும் போதே என்ன இவர்கள் என்ற கோபமும் அதனைப் பதிவு செய்யும் தனிமனிதர்களின் சமூக வலைத்தளங்கள் மீதும் நிறுவனமயப்படுத்தப்பட்ட வலைத்தளப் பொறுப்பாளர்கள் மீதும் கோபமம் அதிருப்தியம் ஏற்படுத்துகின்றது.  இருந்து வருகின்றன.

அண்மை நாட்களில் இலங்கையிலிருந்து வரும் பாரம்பரிய ஒரு பத்திரிகையின் முகநூலில் 02.09.26 திகதியிட்டு  ஒரு செய்தி வந்திருந்தது.

அந்தச் செய்தி பின்வருவதாகும்,

வீதிகளை அமைத்தது மகிந்தாதான்.இப்பொது மெட்ரோ பஸ் ஓட்டுவது அநுராவா?

வீதிகளை அமைக்கவில்லையெனில் அநுராவின் மெட்ரோ பஸ்கள் எந்த வீதிகளில் பயணித்திருக்கும் என்ற தன் மொழிவைப் பத்திரிகையாளருடான சந்திப்பில் பொதுஜன பெரமுனக் கட்சியின் மீனு என்ற செயற்பாட்டாளர் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்.

இந்தக் கேள்வி தொடர்பாக கருத்தாளர்கள் பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.

அவர்களில், கொழும்பில் இயங்கும் பிரபலமான இந்துக் கல்லூரியுடன் அவர் பழைய மாணவராகவோ  அல்லது நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவரும்,பல்கலைக் கழகமொன்றினதின் தொடர்பு உள்ளவருமான கல்வியாளராகத் தோற்றமளிக்கும் ஒருவர் எழுதிய கருத்தப் பதிவு அவர் படித்த கல்லூரியை இழிவாக்கியள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

அவர் ஆங்கிலத்தில்தான் இக்கருத்தை

(N.A)

//There’s a road proceeding from your underpant. You may check and see//

இவ்வாறு எழுதியிருந்தார்.அதனுடைய தமிழ்மொழிபெயர்ப்பு //உங்கள் உள்ளாடையிலிருந்து ஒரு சாலை செல்கிறது நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் //என்பதாகும்.

இவ்வாறு கருத்து எழுதியவருக்கு ஆதரவாக பதில் எழுதியவர்

//(N. Ma)

To

(Na. A) very good answer. If she can’t bend down and find the road many men awaiting to lend their hand //என எழுதியிருந்தார்., அதன் தமிழ்மொழிபெயர்ப்பு // மிக நல்ல பதில் அவளால் குனிந்து சாலையைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் உதவி செய்யக் காத்திருக்கும் ஆண்கள் பலர் உள்ளனர் //என்றும் தொடர்ந்தும் இவர் ஆங்கிலத்தில்

//(N. Ma)

To (N. A )Four clues to check and see : BEND, LEND, HAND, FIND // அதன் தமிழமொழிபெயர்ப்பு

சரிபார்க்க வேண்டிய நான்கு குறிப்புகளாவன வளை,கொடு,கைகொடு,,கண்டுபிடி எனவும்  எழுதியிருந்தார்.

இத்தகைய எழுத்தானது மிக மிக அருவருக்கத்தக்கதாகும்.இத்தகு எழுத்தை தனது முகநூல் தளத்திலிருந்து நீக்காமல் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் பார்வைக்கு கொண்டுவந்த இலங்கையில் நீண்டகால பாரம்பரிய வரலாறு கொண்ட பத்திரிகையின் ஆசிரியர் குழுவினரே மிகப்பெருந் தவறை விட்டிருக்கிறார்கள் என்பதே ஆணித்தரமான உண்மையாகும்.

இக்கருத்தை இப்பத்திரிகை தனது முகநூல் தளத்திலிருந்து நீக்காதிருப்பின், அது பத்திரிகையின் நேர்மையான செயல்பாட்டுக்கு இழுக்கானது மட்டுமல்ல,இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருக்கின்ற பத்திரிகையறிஞரும் இத்தகு வக்கிர குணாம்சங்களைக் கொண்டவர்களை ஊக்கப்படுத்துகிறார் என்றே அல்லது அவரும் இத்தகு வக்கிரமிகு அருவருக்கத்தகக எழுத்துக்களை இரசித்து உள்வாங்குபவரோ என எண்ணத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு பதிவுக்கு கருத்தெழுதுபவர் எழுத்த நாகரீகத்தைப் பேண வேண்டும்.நாகரீகமான பண்பான எழுத்துக்கள் அவரவர் படித்த கல்லூரிகளையும்,அவர் பெற்ற கல்வியையும் அதன் அறிவுக்கூறுகளையும்,அவரைச் சரியான வழியில் வழிநடத்தியவர்களையும்  மதிப்புடன் பார்க்கும் நிலையைத் தோற்றுவிக்கும்.

அநாகரீகமான,அருவருக்கத்தக்க எழுத்துக்களை எழுதபவர்களால் அவர்கள் படித்த கல்லூரிகளுக்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை.

பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒரு பெண் என்பதால்தானோ இப்படியான அருவருக்கத்தக்க கருத்தை கருத்தாளர் எழுதியிருப்பதன் மூலம் அவர் பெண்களை அடிமையாக பார்க்கின்றார் என்று துணிந்து சொல்ல முடியும்.இத்தகையோர் கண்டிக்கத்தக்கவர்களே.

அதே வேளை மகிந்தாவின் ஆட்சி காலத்தில் இலங்கையின் வீதிகள் கார்பற் வீதிகளின் தரத்திற்கு புணரமைக்கப்பட்டன என்பதும் உண்மையே.அதையும்  மறுக்கவும் முடியாது.

எனவே காலங்கடந்த நிலையிலாவது அந்தக் கருத்தை பத்திரிகைக் குழுமம் நீக்குவார்களா?

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *