பாரதியின் கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் பாரதி இராஜநாயகத்தால் எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பான “இலங்கை போருக்குப் பிந்திய தமிழர் அரசியல்” எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது.
இன்று 5ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு திருநெல்வேலி, இராமநாதன் வீதி, இலக்கம் 37இல் அமைந்துள்ள ஏ1 ராஜா கிரீம் ஹவுஸ் – சரஸ்வதி மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.
நிகழ்வில் வரவேற்புரையை முன்னாள் நிர்வாக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தர் தி. திருவாகரன் நிகழ்த்தவுள்ளதுடன் ஆசியுரையை ராம் தேவலோககேஸ்வரக் குருக்களும் வெளியீட்டு உரையை முன்னாள் நிர்வாக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தர் இரேனியஸ் செல்வின் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
இதேவேளை பேராசிரியர் கே.டீ. கணேசலிங்கம் சிறப்புரையையும் கல்வியியலாளர் ந.அனந்தராஜ் மதிப்புரையும் நிகழ்த்தவுள்ளனர்.
நிகழ்வின் விசேட அதிதிகளாக பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, பேராசிரியர் கே. சிதம்பரநாதன், அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவ்விழாவில் தமிழ் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் என அனைவரையும் அன்புடன் கலந்து கொள்ளுமாறு அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

![]()